Published on 30/12/2024 | Edited on 30/12/2024

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குல்தீப் யாதவ், ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், குல்தீப் யாதவ் வகுப்பறையில் இருந்துகொண்டு தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துள்ளார். இதனை, வகுப்பறையில் இருந்த 2ஆம் வகுப்பு மாணவர்கள் சிரித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த குல்தீப் யாதவ் 8 வயது மாணவன் ஒருவனை கடுமையாக அடித்து தாக்கியுள்ளார். இதில் அந்த மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, நடந்த சம்பவம் குறித்து அந்த மாணவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரில் பேரில், ஆசிரியர் குல்தீப் யாதவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.