Advertisment

ஆசிரியரின் தொடர் பாலியல் வன்கொடுமை; 8 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

Teacher arrested for misbehaving with class 8 student in Bengaluru

8 வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர் ஒருவர் 6 மாத காலம் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள தனியார்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை, அப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 6 மாதங்களாக மாணவியை ஆசிரியர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்தோடு இல்லாமல் இதைப்பற்றி வெளியே சொன்னால் தேர்வில் தோல்வியடையச் செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

Advertisment

இதனால் வெளியே சொல்லாத அந்த மாணவி,ஒருகட்டத்தில் ஆசிரியரின் அத்துமீறலைத் தனது பள்ளித் தோழியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரின் தோழி பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது. பின்பு சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோருக்குத் தெரியவரவே கவுனிப்பள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆசிரியரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

arrested police teacher
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe