Advertisment

டீ கப்பில் சிலுவை அடையாளமா? - கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!   

Tea shop sealed in Tirupati for having religious symbols

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள டீ கடையில் டீ வழங்கும் கப்பில் மத அடையாளத்தைக் குறிக்கும்படி இருந்ததால் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள திருமலையில் இந்து மதத்தைத்தவிர வேறு எந்த மதம் சார்ந்த பிரச்சாரம் செய்யும் விதமாக சின்னங்களைக்கொண்டு வரவும்பயன்படுத்தவும் தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் திருப்பதி மலையில் உள்ள டீ கடை ஒன்றில் வழங்கப்பட்ட டீ கப்பில் கிறிஸ்துவ மதத்தின் சிலுவை அடையாளமாக டீ என்ற எழுத்து அச்சிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்பு இது குறித்து தேவஸ்தானத்திலும் பக்தர்கள் சிலர் புகார் அளித்துள்ளதாகத்தெரிகிறது. இதனைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் திருப்பதி மலையின் மேல் இருக்கும் டீ கடைகளில் ஆய்வு செய்தனர்.

பின்னர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே உள்ள ஒரு டீ கடையில் சிலுவை போன்று டீ அச்சிடப்பட்ட கப்புகளைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த கப்புகளைப்பறிமுதல் செய்த தேவஸ்தான அதிகாரிகள் டீ கடைக்கு சீல் வைத்தனர். மேலும் திருப்பதி மலையில் இந்து மதத்தைத்தவிர வேறு மத அடையாளங்கள் இருக்கக் கூடாது என எச்சரித்துள்ளனர்.

sealed temple Tirupati
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe