Advertisment

கடனில் ஸ்கூட்டர் வாங்கியதை கொண்டாட மூன்று மடங்கு செலவு செய்த டீ கடைக்காரர்!

Tea seller throws DJ party to celebrate purchase of scooter in madhya pradesh

தேநீர் விற்பனையாளர் ஒருவர், பைக் வாங்கியதை கொண்டாடும் விதமாக அவர் செய்த செயல் தற்போது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Advertisment

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முராரி லால் குஷ்வாஹா. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். முராரி லால் குஷ்வாஹா, ஷிப்புரி பகுதியில் தேநீர் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், முராரி ரூ.20,000 முன்பணம் கொடுத்து கடனில் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார்.

Advertisment

புதிய ஸ்கூட்டர் வாங்கியதை கொண்டாடுவதற்காக, ஜேசிபி ஒன்றை வாடகைக்கு எடுத்து ஜேசிபி முன்னே உள்ள கருவில் ஸ்கூட்டரை பொருத்தி, டிஜே வைத்து அந்த பகுதி முழுவதும் ஊர்வலமாக வந்துள்ளார். முன்னே டிஜே போடும் பாடலுக்கு நடனமாடி கொண்டாடி வந்துள்ளார். இந்த காட்சியை, அவரது நண்பர்கள் மட்டுமல்லாமல், அந்த பகுதியில் வந்தவர்களும் ரசித்து பார்த்தனர். ரூ.20,000 முன்பணம் கொடுத்த கடனில் ஸ்கூட்டர் வாங்கியதற்கு, ரூ.60,000 செலவு செய்து இதை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

scooter
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe