ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று காலையிலிருந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்தில் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் காலையிலிருந்து வந்து பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் உண்ணாவிரதம் நடைபெறும் டெல்லி ஆந்திர பவன் அருகே தொண்டர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்டவர் ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த அர்ஜூன் ராவ் என்பது தெரியவந்துள்ளது. இவர் மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அர்ஜூன் எழுதிய தற்கொலை கடிதத்தை கைப்பற்றி டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.