நாட்டில் கடன் வழங்குதலை ஊக்குவிக்கவும், பொருளாதாரத்தில் கடன் வழங்குதல் தன்மையை மேம்படுத்தவும் கடந்த ஜூன் மாதத்தில் டிஜிட்டல் பொது நிதி சேவை மையத்தை அமைப்பதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/RBI-in_4.jpg)
தற்போது, இந்த டிஜிட்டல் பொது நிதி சேவை மையம் அமைக்க விப்ரோ, ஐ.பி.எம், டி.சி.எஸ், கேப்ஜெமினி, உள்ளிட்ட ஆறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ரிஸர்வ் வங்கி தேர்வு செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் டிஜிட்டல் பொது நிதி சேவை மையம் அமைப்பதோடு, கடன் வாங்க விரும்பும் நபர்கள், கடன் வாங்கியவர்கள், கடன் கட்ட தவறியவர்கள் ஆகியோர்களின் விவரங்களை சேகரித்து வைக்கும் பணிகளையும் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)