ADVERTISEMENT

ஐபிஎம் நிறுவனத்தை வீழ்த்திய டிசிஎஸ் நிறுவனம்!

02:17 PM Jun 12, 2019 | santhoshb@nakk…

உலகில் மிகப்பெரிய ஐடி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாக ஐபிஎம் (IBM) நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தனது மென்பொருள் நிறுவனத்தை நிறுவி அதை சிறப்பாக நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் மென்பொருள் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனமாக டிசிஎஸ் (TCS) நிறுவனம் உள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பங்குச்சந்தையில் ஐபிஎம் நிறுவனத்தை வீழ்த்தி, டிசிஎஸ் நிறுவனம் முன்னேறியது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த திங்கள்கிழமை வர்த்தகம் முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 12,005 கோடி டாலர் ஆகவும், ஐபிஎம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 11,960 கோடி டாலராக உள்ளது. அன்றைய தினமே மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மதிப்பு ரூபாய் 8.36 லட்சம் மதிப்பை விட கூடுதல் மதிப்பை எட்டியது டிசிஎஸ் நிறுவனம். 2019 ஆம் நிதி ஆண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் 450 கோடி டாலராகும் , நிகர வருமானம் 2100 கோடி டாலராகும். ஐபிஎம் நிறுவனத்தின் லாபம் 870 கோடி டாலராகும் , நிகர வருமானம் 7,906 கோடி டாலராகும்.

டாடா குழுமத்தின் அங்கமாக 1968 ஆம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக குழும நிறுவனங்களில் அதிகம் லாபம் ஈட்டும் நிறுவனமாக டிசிஎஸ் நிறுவனம் திகழ்கிறது. அதே போல் ஐபிஎம் நிறுவனம் 1950 ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்தது. அப்போது இந்நிறுவனத்திற்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் ஐபிஎம் நிறுவனம் 1970 ஆம் இந்தியாவில் இருந்து வெளியேறியது. அதன் பின் டாடா குழுமத்துடன் கூட்டணி அமைத்து 1992 ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனம் மீண்டும் இந்தியாவிற்குள் வந்தது. டாடா குழுமத்துடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக 1997 ஆம் ஆண்டு டாடா குழுமத்தை விட்டு வெளியேறி தனி நிறுவனமாக ஐபிஎம் நிறுவனம் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT