ADVERTISEMENT

ஏர் இந்தியாவை வாங்கும் முயற்சியில் டாடா குழுமம்!

07:07 PM Sep 15, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், கடுமையான கடனில் சிக்கித் தவிக்கிறது. தற்போது 43,000 கோடி கடனில் சிக்கித் தவிக்கும் அந்த நிறுவனத்தைக் கடந்த 2018 ஆம் ஆண்டே விற்க மத்திய அரசு முயற்சி செய்தது. ஆனால் அப்போது ஏர் இந்தியாவை வாங்க யாரும் முன்வரவில்லை.

இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதனையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா குழுமம் ஏலத்தொகையை சமர்ப்பித்துள்ளது. ஏலத்தொகையை சமர்ப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. டாடா குழுமத்தைத் தவிர வேறு சில நிறுவனங்களும் ஏல தொகையை சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

1932 ஆம் ஆண்டு டாடா குழுமம் ஆரம்பித்த டாடா ஏர்லைன்ஸே 1946 ஆம் ஆண்டு ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றப்பட்டது. இதன்பின்னர் 1953 ஆம் ஆண்டு ஏர்இந்தியா அரசுடைமையாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT