Skip to main content

அமேசான், பிளிப்கார்டுக்கு போட்டியாக களமிறங்கிய 'டாடா நியு' செயலி!

Published on 08/04/2022 | Edited on 08/04/2022

 

'Tata New' processor launched to compete with Amazon and Flipkart!

 

மளிகைப் பொருட்கள் முதல் விமான டிக்கெட்டுகள் வரை அனைத்தையும் பெறும் வகையில் டாடா குழுமம் 'டாடா நியு' (Tata Neu) செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

 

மளிகைப் பொருட்கள் முதல் விமான டிக்கெட்டுகள் வரை அனைத்தையும் ஒரே செயலியில் பெறும் வகையில் டாடா குழுமம் 'டாடா நியு' என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. டாடா குழுமத்தின் புதிய நிறுவனமான டாடா டிஜிட்டல் 'டாடா நியு' என்ற செயலியைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இதன்படி, டாடாவின் அனைத்து பிராண்டுகளும் ஒரே செயலியில் ஒருங்கிணைப்பட்டுள்ளன. 

 

பிக்பேஸ்கெட், குரோமா, டாடா கிளிக், டாடா பிளே உள்ளிட்டவை டாடா நியு செயலியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏர் இந்தியா, டைட்டன், தனீஷ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்டவையும் இந்த செயலியின் கீழ் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதன் மூலம், மளிகைப் பொருட்கள், விமான டிக்கெட்டுகள் என டாடாவின் அனைத்து பிராண்டுகளையும் ஒரே செயலியில் வாடிக்கையாளர்கள் பெற முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடாவின் இந்த புதிய செயலி அமேசான், பிளிப்கார்டுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.பி.எல் இறுதி போட்டியில் அமீர்கான் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

aamir khan lal singh chaddha movie trailer release IPL final

 

'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தை தொடர்ந்து அமீர் கான் 'லால் சிங் சத்தா' என்னும் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, மோனா சிங், நாகா சைதன்யா உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் ஆகும். இந்தப் படத்தில் குறைந்த அளவிலான ஐக்யூ உள்ளவர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் ஐ.பி.எல் இறுதி போட்டியில் வெளியிடப்படவுள்ளது. ஐ.பி.எல் தொடரின் 15வது சீசன் மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டி வரும் 29 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஏ.ஆர் ரஹ்மான் தலைமையில் கலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் லால் சிங் சத்தா படத்தின் ட்ரைலர் வெளியிடப்படவுள்ளது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக  ஒளிபரப்புகிறது. உலக வரலாற்றிலேயே இதுவரை எந்த படத்தின் ட்ரைலரும்  இது போன்ற கிரிக்கெட் நிகழ்ச்சிகளில் வெளியாகாத நிலையில் முதல் முறையாக இப்படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது. இதனால் அமீர்கானின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளன.

 

 

Next Story

தமிழரின் கையில் 'ஏர் இந்தியா'- கடனிலிருந்து மீளும் கனவு சாத்தியமாகுமா?

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

 'Air India' in the hands of Tamils ​​- will it recover from the debt?

 

ஏர் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு தலைவராக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தை, கடந்த 2018ஆம் ஆண்டே விற்க மத்திய அரசு முயற்சி செய்தது. இதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம், ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வங்கியதாக மத்திய அரசு அறிவித்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனம், அதிகாரப்பூர்வமாக டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.  

 

 'Air India' in the hands of Tamils ​​- will it recover from the debt?

 

தற்பொழுது டாடா நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவராக என்.சந்திரசேகரனை நியமித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த என்.சந்திரசேகரன் ஏற்கனவே 'டாடா சன்' என்ற டாடா குழுமத்தின் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். விரைவில் இதேபோல் ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்பட்டு கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஏர் இந்தியாவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என டாடா குழுமம் தெரிவித்துள்ளது.

 

ஏர் இந்தியாவை நஷ்டத்திலிருந்து மீட்டுக்கொண்டுவர பலகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் உரிய தீர்வு கிடைக்காததால் நஷ்டத்தின் ஒரு பகுதியை மத்திய அரசு தானே கையாண்டு ஏர் இந்தியாவின் சொத்துக்களான நிலம், கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை விற்று சரி கட்ட முயற்சிகள் மேற்கொள்ளும் என்றும், மேலும் ஒரு பகுதிக்கு தானே (ஏர் இந்தியா) பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், மற்றொரு பகுதிக்கு டாடா குழுமம் பொறுப்பேற்றுக் கொள்ளும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவை குறைந்த விலைக்கு டாடா நிறுவனம் வாங்கியிருந்தாலும், ஏர் இந்தியாவின் கடனில் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில் என்.சந்திரசேகரன் எனும் ஒரு தமிழர் கையில் சிக்கியுள்ள ஏர் இந்தியா மீளுமா என்பதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.