மீ டூ ஹாஷ் டேக் மூலம் இதுவரை சினிமாத்துறை, விளையாட்டுத்துறை, அரசியல் போன்ற இடங்களில் இருந்து மட்டுமே புகார்கள் வந்துகொண்டு இருந்தது. இப்போது தொழில் நிறுவனத்திலும்ஆரம்பித்து இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்ப்ரேட் கம்யூனிகேஷன் தலைவராக இருக்கும் சுரேஷ் ரங்கராஜன், இதற்குமுன் வோடாஃபோன், நிஸான் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பணியாற்றி இருக்கிறார். அவர் மீது அங்கு பணியாற்றிய சகப்பெண் ஊழியர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவருக்கு கட்டாய விடுப்பு அளித்துள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.
மீ டூ ஹாஷ் டேக் விஷயத்தில் டாடா மோட்டார்ஸ் கார்ப்ரேட் கம்யூனிகேஷன் தலைவர் சுரேஷ் ரங்கராஜன்...
Advertisment