Tarun Gogoi passed away

Advertisment

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில்ஒருவரும், அசாம் மாநிலத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவருமான தருண் கோகாய் (86) கடந்த ஆகஸ்ட் மாதம் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். அதன்பின்னர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவருக்கு கரோனா பாதிப்பு நீக்கினாலும், கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் அவதிப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது. இதனையடுத்து உடல்நலம் தேறி கடந்த அக்டோபர் மாத இறுதியில் அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால், மீண்டும் அவரது உடல்நலன் குன்றியதை அடுத்து கடந்த 1ந்தேதி மீண்டும் தருண் கோகாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisment

அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனையடுத்து திப்ருகருக்கு சென்றிருந்த அம்மாநில முதல்வர் நேற்று மாலை தனது பயணத்தை ரத்து செய்து மீண்டும் கவுஹாத்தி திருப்பினார். இந்நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உடல்நலக் குறைவால் தருண் கோகாய் காலமானார். அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு அம்மாநில முதல்வர் சார்பானந்தா சோனோவால் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.