Advertisment

''தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்'' - பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து!  

modi

சித்திரை முதல்நாளான தமிழ் புத்தாண்டிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி அவரது டிவிட்டர் பதிவில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், ''தமிழகத்து சகோதர சகோதரிகள், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும். ஒவ்வொருவர் வாழ்விலும் ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சியை நிறைக்க பிரார்த்திக்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

Advertisment

நேற்றே (13.04.2021) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.''தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழ் பெருமக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். தமிழ் பெருமக்கள் பல்லாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். தமிழர்கள்வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும்,நலமும் வளமும்பெருகட்டும்'' என தெரிவித்துள்ளார்.

Advertisment

modi tamil newyear
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe