இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவெரியில் முதன்மை நிறுவனமாக விளங்கும் ஸ்விக்கி நிறுவனம் தனது நிறுவனத்தில் முக்கியம் தலைமை பொறுப்பிற்கு தமிழகத்தை சேர்ந்த திருநங்கை ஒருவரை நியமித்துள்ளது.

Advertisment

tamilnadu transgender woman appointed as chief project manager of swiggy

ஸ்விக்கி நிறுவனம் தனது முதன்மை திட்ட மேலாளராக சம்யுக்தா விஜயன் என்பவரை நியமித்துள்ளது. தமிழகத்தின் பொள்ளாச்சியில் பிறந்த சம்யுக்தா விஜயன், 10 ஆண்டுகள் அமேசான் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். பின்னர் ஆடை வடிவமைப்பில் ஈடுபாடு கொண்ட இவர் ஐரோப்பா, அமேரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அங்கு பேஷன் டிசைனராக இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த இவர், தனியாக ஒரு ஆன்லைன் பேஷன் இணையத்தை ஆரம்பித்தார். இந்நிலையில் தற்போது இவர் ஸ்விக்கி நிறுவனத்தின் முதன்மை திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.