Advertisment

தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு நிதியை விடுவித்தது மத்திய நிதியமைச்சகம்!

Advertisment

tamilnadu including 17 states funds released union finance ministry

Advertisment

மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை, 2021- 22 ஆம் ஆண்டுக்கான பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 4- வது மாதத் தவணை தொகையாக, ரூபாய் 9,871.00 கோடியை மாநிலங்களுக்கு நேற்று (07/07/2021) விடுவித்தது. இதன் மூலம் மொத்தம் ரூபாய் 39,484.00 கோடி, தகுதிவாய்ந்த மாநிலங்களுக்கு மானியமாக நடப்பு நிதியாண்டில் விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு 4- வது தவணையின் மூலம் ரூபாய் 183.67 கோடியும், 2021-22 ஆம் ஆண்டில் மொத்தம் ரூபாய் 734.67 கோடியும் கிடைத்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 275-இன் கீழ் மாநிலங்களுக்கு, பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியம் வழங்கப்படுகிறது. பகிர்விற்கு பின் மாநிலங்களின் வருவாய் கணக்கில் உள்ள இடைவெளியை நீக்க 15- வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி இந்த மானியங்கள் மாத தவணையாக வழங்கப்படுகின்றன.

tamilnadu including 17 states funds released union finance ministry

பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை தமிழகம், ஆந்திரப்பிரதேசம், அசாம், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகண்ட், மேற்கு வங்கம் ஆகிய 17 மாநிலங்களுக்கு வழங்க 15- வது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

2021-22- ஆம் நிதி ஆண்டில் 17 மாநிலங்களுக்கு பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக மொத்தம் ரூபாய் 1,18,452 கோடி வழங்க நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இதில் இதுவரை 4 தவணையாக ரூபாய் 39,484 கோடி (33.33%) விடுவிக்கப்பட்டுள்ளது.

funds Tamilnadu UNION FINANCE MINISTER
இதையும் படியுங்கள்
Subscribe