Published on 08/10/2018 | Edited on 08/10/2018

இன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க இருக்கிறார்.
நேற்று முதல்வர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் டெல்லி புறப்பட்டனர். விமானநிலையத்தில் அதிமுக எம்.பி.க்கள் அவர்களுக்கு மலர்கொத்து அளித்து வரவேற்றனர். பின் அங்குள்ள தமிழக அரசு இல்லத்தில் தங்கினார்கள். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் பிரதமரை சந்தித்து எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பது பற்றியும், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.