Skip to main content

"தமிழில் வாதாடுவது சிறப்பாக இருக்கும்" - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

tamilisai soundararajan talks about women involved in judiciary  

 

புதுச்சேரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் புதுச்சேரி வழக்கறிஞர்கள் அலுவலக அறைகளுக்கான கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டு கட்டிடம் கட்டும் பணிகளை, பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு  தலைமை நீதிபதி ராஜா, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் என பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

 

இந்த விழாவில் பங்கேற்ற மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசும்போது, " நீதிமன்றத்தில் அதிக நேரம் மக்கள் செலவிடக்கூடாது. நீதி விரைந்து தரப்படுதல் அவசியம். நீதிமன்றம் நவீனப்படுத்தப்பட வேண்டும். அதற்கு நீதிமன்றங்களில் தரமான 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும். கடந்த 2014ல் சான்றிதழ்களில் உயர் அதிகாரிகள் கையெழுத்து தேவையில்லை என்ற முறையைப் பிரதமர் நடைமுறைப்படுத்தினார். இது ஜனநாயகம். நீதித்துறை மக்களுக்கானது. நீதித்துறைக்கு அனைத்து வித ஒத்துழைப்பையும் அரசு தரும். உச்சநீதிமன்ற நீதிபதி தொடங்கி அனைத்து நீதிபதிகளுக்கும் தெரிவிப்பது தன்னிச்சையாக நீதித்துறை செயல்படும் என்ற உறுதியைத்தான்.

 

நீதிபதிகள் நியமனம் பற்றிய கொலிஜியம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளேன்.  உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றியே தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினோம். அதுதொடர்பாக பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போதைய நிலையே தொடரும். நீதிபதிகள் நியமனத்தில் சில விஷயங்களை மேம்படுத்த விரும்புகிறோம். பலரும் தேவையில்லாமல் எல்லா விஷயங்களையும் பிரச்சினை ஆக்குகின்றனர். நீதித்துறைக்கும், அரசுக்கும் பிரச்சனை என்று கூறுவது தவறானது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் சுமுக உறவே உள்ளது. புதுச்சேரிக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளை அல்லது நீதிபதிகள் அடங்கிய அமர்வுகள் நிச்சயம் அமைத்துத் தரப்படும்" என்று உறுதியளித்தார்.

 

இந்த விழாவில் கலந்து கொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசும்போது, " உள்ளூர் மொழியில் நீதிமன்றத்தில் வாதாட வேண்டும். தமிழில் வாதாடுவது சிறப்பாக இருக்கும். பல சிக்கல்கள் இதில் இருந்தாலும் மக்களுக்கு இது மிக உதவியாக இருக்கும். நீதித் துறையில் பணியாற்ற அதிக அளவில் பெண்கள் வரவேண்டும்" என்றார். முன்னதாக பேசிய முதல்வர் ரங்கசாமி, " புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை வைத்து  வருகின்றோம் அதற்கான ஆலோசனைகளை நீதித்துறையினர் அரசுக்கு வழங்க வேண்டும். புதுச்சேரியில் ரூ.13 கோடி செலவில் வழக்கறிஞர்கள் கட்டிடம் கட்டப்படவுள்ளது.  புதுச்சேரியில் சட்டப் பல்கலைக்கழகம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இளம் வழக்கறிஞர்களுக்கான உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து...” - மல்லிகார்ஜுன கார்கே உறுதி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
State status for Puducherry Mallikarjuna Karke confirmed

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. நாங்கள் என்ன வாக்குறுதி, சொன்னாலும் செய்வோம். ஆனால் பிரதமர் மோடி செய்ய மாட்டார். இதனை காங்கிரஸும், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மட்டுமே செய்ய முடியும்.

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூட இடம் பெறவில்லை. நேற்று வெளியான தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை அப்பட்டமாக புறக்கணித்துள்ளது. 2024 தேர்தலில் இந்தியக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு வாக்குறுதியளித்ததை நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட ஆலைகள் ரேஷன் கடைகள் திறக்கப்படும்” எனப் பேசினார். 

Next Story

கணவன் முகமூடியுடன் களத்தில் இறங்கிய மனைவி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The wife entered the field with her husband masked

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் புதுச்சேரியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழ்வேந்தன் மனைவி, அதிமுக கட்சியினருடன் சேர்ந்து பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவருடைய கணவர் தமிழ்வேந்தனின் முகமூடியை அணிந்தபடி அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''அதிமுகவில் ஒரு புதிய வாய்ப்புக் கொடுத்துள்ளார்கள். ஒரு இளைஞருக்கு வேட்பாளராக வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். அவருக்கு 34 வயது தான் ஆகிறது. அவர் என்னுடைய கணவர் என்பதை விடவும், இளைஞர் ஒருத்தர் தேர்தலில் நிற்கிறார் என்பதே முக்கியம்.
 

அவங்களோட வாக்குறுதிகள் இன்னும் எல்லாருக்கும் போய் ரீச் ஆக வேண்டும் என்பதற்காக நான் வந்திருக்கிறேன். போதைப்பொருளை ஒழிப்பதும், கல்வியை அனைவருக்கும் சமமாக்குவது என்பதுதான் அவருடைய இலக்காக இருக்கிறது. அவருக்கு சப்போர்ட்டாக இங்கு நான் வந்து இருக்கேன். மக்களுக்கு நல்லாவே தெரியும் ஆட்சியில் இருக்கின்ற பாஜகவாக இருக்கட்டும் எதிர்க்கட்சியாக இருக்கட்டும் அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. அவர்களுக்கு எதுக்கு இன்னொரு வாய்ப்பு. ஆட்சிக்கு வரும்போது செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர்கள் செய்திருப்பார்கள். ஆனால் எதுவும் செய்யவில்லை. அதனால் தான் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் அதை செய்வோம் என்று சொல்கிறார்கள். ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமியாக இருக்கட்டும் அன்பழகனாக இருக்கட்டும் அவர்கள் ஒரு நல்ல வாய்ப்பை எனது கணவருக்கு கொடுத்துள்ளார்கள்''என்றார்.