ADVERTISEMENT

''வடை சுட்ட காலம் போய் கால் பதிக்கப் போகிறோம்'' - தமிழிசை பெருமிதம்

04:39 PM Jul 22, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதிய கல்விக் கொள்கையிலும் காலை உணவுத் திட்டம் இருக்கிறது எனப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''தேசிய கல்விக் கொள்கை ஏன் உருவாக்கப்பட்டது என்றால் பல ஆண்டு காலமாக நமது கல்விக் கொள்கை புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது. அது மட்டுமல்ல, அது ஒரு முயற்சி சாராத வேலை வாய்ப்பை மட்டுமே பெறக்கூடிய ஒரு வகுப்பறை சார்ந்த கல்வியாக இருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி வகுப்பறையிலிருந்து உலக அரங்கிற்கு நமது கல்வியை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவும், இந்தியா 60 சதவீதத்திற்கு மேல் இளைஞர்கள் இருக்கின்ற நாடு., அதனால் மிகப் பெரிய கல்விப் புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் உருவாக்கப்பட்டதுதான் புதிய கல்விக் கொள்கை.

இதில் நமக்கு வருத்தம் அளிக்கக்கூடியது என்னவென்றால், தமிழகம் போன்ற மாநிலங்கள் இதை உடனே பின்பற்றி நடைமுறைப்படுத்தி மாணவர்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அதில் அரசியல் போகக்கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. காலையில் காலை உணவு கொடுக்கிறேன் என்று சொல்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையிலும் அது இருக்கிறது. ஐம்பதாயிரம் பேர் தமிழ் மொழியில் ஃபெயில் ஆகுகிறார்கள். இதை எப்படி நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும். தமிழ்... தமிழ்... என்று சொல்கிறோம். ஆனால் அந்த மொழி பேசுகின்ற மாநிலத்தில் தாய் மொழியில் 50,000 பேர் பொதுத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் இது நாம் தீவிரமாக ஆலோசிக்க வேண்டிய ஒன்று.

அப்துல் கலாமிடம் 2004ல் அண்ணாதுரை, நாங்கள் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலனை அனுப்பப் போகிறோம் என்று சொன்னவுடன், அப்துல்கலாம் ஏன் நிலவுக்கே நாம் விண்கலத்தை அனுப்பினால் என்ன என்று கேட்டாராம். நிலாவில் வடை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற காலம் போய் இன்று நாம் அங்கு இறங்கப் போகிறோம்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT