மோடியை பின்பற்றினால் ஓடிப்போகும் கரோனா!’ -தமிழிசை கவிதை!

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்தபோது வலைத்தளங்களில், குறிப்பாக மீம்ஸ்களில் பலமாக அடிபட்டவர், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். தெலங்கானா மாநில ஆளுநரான பிறகு, வலைத்தளங்களில் அவர் குறித்த பதிவுகள் இல்லாமல் போனது. தற்போது பிரதமர் மோடியைப் பின்பற்றினால் கரோனா நாட்டை விட்டே ஓடும் என்று கவிதை வாசித்திருக்கிறார்.

tamilisai poem about corona

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் ‘கரோனா’ கவிதை இதோ -

"பிரிந்து பிரிந்து நாம் இருந்தால் பதறி ஓடும் கரோனா

வெளிப்படையாய் நாம் சென்றால் களிப்படைந்து தொற்றும் கரோனா

ஊரடங்கு இல்லை என்றால் நம் உயிரை அடக்கும் கரோனா

தொற்று தடுப்பை பின்பற்றினால் தோற்று ஓடும் கரோனா

ஊரடங்கைப் பின்பற்றினால் ஊரைவிட்டே ஓடும் கரோனா

நாட்டின் பிரதமரை பின்பற்றினால் நாட்டை விட்டே ஓடும் கரோனா

மருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்றினால் மரித்துப் போகும் கரோனா

மோடியை பின்பற்றினால் ஓடிப் போகும் கரோனா

மோடியை பின்பற்றினால் ஓடிப் போகும் கரோனா..."

ஒரு மாநிலத்தின் ஆளுநராகவே இருந்தாலும், தமிழிசை ஒரு மருத்துவரும் கூட. அந்த வகையில், அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று நம்புவோமாக! கவிதையினூடே அரசியல் கலந்திருக்கிறது என்ற விமர்சனத்தைத் தவிர்ப்போமாக!

corona virus modi Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Subscribe