Advertisment

நீங்கள் தமிழரா..? இந்தியரா..? ஆங்கில நிருபரின் கேள்விக்கு சிவன் சாட்டையடி பதில்!

ஜுலை மாதத்தில் சந்திராயன்-2 விண்கலம் நிலவில் சோதனை செய்ய அனுப்பப்பட்டது. நிலவின் தென்துருவத்திற்கு செல்வதற்காக விக்ரம் லேண்டர் விண்கலம் அனுப்பப்பட்டது. சில நாட்களுக்கு முன் கவுண்டவுன் தொடங்கிய நிலையில் மறுநாள் காலை திடீரென்று ஏற்பட்ட கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியது. விக்ரம் லாண்டர் இலக்கிலிருந்து 2.1 கிலோமீட்டர் தொலைவில் கீழே விழுந்தது. சந்திராயன்-2 விண்கலம்‌ பழுதானவுடன் இஸ்ரோ தலைவர்‌ சிவன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். பிரதமர் மோடி அவரை கட்டித்தழுவி ஆறுதல்படுத்தினார். இரு நாட்கள் முன்னர் விக்ரம் லாண்டரின் புகைப்படங்கள் வெளியாயின. ஆனால் இன்னும் தொடர்பு ஏற்படவில்லை. இந்நிலையில் அவரிடம் பிரபல ஆங்கில தொலைக்காட்சியானது பேட்டி எடுத்தது.

Advertisment

dxfgdb

அதில் தொகுப்பாளர் அவரிடம், "தமிழராய் இருந்து நீங்கள் இவ்வளவு பெரிய பதவிக்கு உயர்ந்துள்ளீர்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு கூற விரும்புவது என்ன என்று கேள்வி எழுப்பினார். அதற்கு இஸ்ரோ தலைவர் சிவன், "முதலில் நான் ஒரு இந்தியன். இஸ்ரோவின் தலைவர் பொறுப்பை ஏற்ற பிறகு நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் நான் சொந்தமானவன். பல மொழி பேசும் மக்கள் உழைத்தே இந்த நாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறார்கள்" என்று பதிலளித்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ISRO
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe