ADVERTISEMENT

தமிழக மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்... ஆந்திராவில் பரபரப்பு!

07:10 PM Oct 22, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர்களின் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று திருப்பதியில் நடந்த சட்டக் கல்லூரி தேர்வுக்காக தமிழகத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுதச் சென்றனர். காலையில் தேர்வு எழுத சென்றவர்கள் இன்று மாலை சென்னை திரும்பிய போது ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே எஸ்.பி.புரம் டோல்கேட் வழியாக மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது காரில் பாஸ்டேக் இல்லாததால் பணம் கட்ட சொல்லியிருக்கிறார்கள் சுங்கச்சாவடி ஊழியர்கள்.

பாஸ்டேக் இல்லை என்றால் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் மாணவர்கள் கட்டணம் செலுத்த மறுத்துள்ளனர். இதனால் வாக்குவாதத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.அப்பொழுது தமிழக மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை விரட்டி விரட்டி தாக்கினர். மேலும் தமிழக மாணவர்கள் வந்த வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. மாணவர்களுடன் உடன் வந்த உறவினர்களும், பெண்களும் தாக்கப்பட்டனர். காவல்துறையினர் முன்னிலையில் இந்த தாக்குதல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT