மாநிலங்கள் வாரியாக மருத்துவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிகை 1,35,456 என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதேபோல் அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தம் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 1,73,384 ஆகும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/union government.jpg)
மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்திற்கு அடுத்து 1,22,875 மருத்துவர்களுடன் கர்நாடகா மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் 66,944 மருத்துவர்களும், ராஜஸ்தான் மாநிலத்தில் 43,388 மருத்துவர்களும் மட்டுமே உள்ளனர். நாட்டிலேயே குறைந்த பட்சமாக மிசோரம் மாநிலத்தில் வெறும் 74 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர் என்று மத்திய அரசின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow Us