மத்திய அமைச்சர்களைச் சந்தித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி! (படங்கள்) 

தமிழ்நாடு ஆளுநராகப் பதவியேற்ற பிறகு இரண்டாவது முறையாக ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 23ஆம் தேதி அன்று பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு ஆளுநர் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழக மக்களின் நலன் மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆளுநரிடம் பிரதமர் கேட்டறிந்தார். மேலும், தமிழக நலனுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதி அளித்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்த ஆளுநர், ஜம்மு - காஷ்மீர் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் நேற்று (27/10/2021) மாலை சந்தித்துப் பேசினார்.

governor Tamilnadu Union Minister
இதையும் படியுங்கள்
Subscribe