Advertisment

மத்திய கல்வி அமைச்சருடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!

Tamil Nadu Governor RN Ravi meets Union Education Minister

டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, முன்னாள் ராணுவ வீரர்கள் பிரச்சனைகள் குறித்து ஆலோசித்ததாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

அதைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (08/04/2022) சந்தித்துப் பேசினார். சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டு வளர்ச்சியை வலுப்படுத்துதல், தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்துதல், தேசிய கல்விக் கொள்கை 2022 குறித்து கலந்தாலோசித்ததாக மத்திய கல்வி அமைச்சர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

Tamil Nadu Governor RN Ravi meets Union Education Minister

இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் தமிழ்நாடு ஆளுநர் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாக தகவல் கூறுகின்றன.

Delhi governor Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe