Tamil Nadu Governor RN Ravi meets PM

Advertisment

டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியைத்தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (23/10/2021) இரவு நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு அரசியல் நிலவரம், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், நிலுவையில் உள்ள நீட் தேர்வு விலக்கு அளிக்கக்கோரும் மசோதா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தமிழ்நாடு ஆளுநர், பிரதமருடன் ஆலோசித்ததாகத் தகவல் கூறுகின்றன.

தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றபின்பு முதன்முறையாகப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

பிரதமரைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு மூத்த மத்திய அமைச்சர்களையும் தமிழ்நாடு ஆளுநர் சந்திக்கவிருப்பதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

இச்சந்திப்பு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டின் நலனுக்கான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி, உறுதி அளித்ததாகத் தெரிவித்துள்ளது.