இன்று காவிரி ஆணையத்தின் கூட்டம் காணொளி மூலமாக நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் காவிரி ஆணையத்தின் தலைவர் ஆர்.கே.ஜெயின் தன் அலுவலகத்தில் இருந்து ஆலோசனையில் கலந்துகொண்டார்.அதேபோல்தமிழகம், கர்நாடகா,கேரளா, புதுச்சேரி மாநிலத்தைசேர்ந்தஉறுப்பினர்கள்தங்களுடைய மாநில தலைநகரங்களில் இருந்து ஆலோசனையில் கலந்து கொண்டார்கள்.
இந்த ஆலோசனையில், மேகதாது அணை குறித்துபரிசீலனை செய்ய வேண்டும் என்றகோரிக்கையைகர்நாடக அரசு விடுத்திருந்தது. இதற்கு தமிழக அரசுகடும் எதிர்ப்பைதெரிவித்து,இந்த கோரிக்கையைபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என தெரிவித்த நிலையில், மேகதாது அணை குறித்தகர்நாடகாவின்கோரிக்கையைபற்றி ஆணையம் பரிசீலிக்கவில்லைஎன தகவல் வெளியாகியுள்ளது.