Skip to main content

காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு!

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Tamil Nadu government appeal in Cauvery Management Commission

 

த‌மிழகத்தின் குறுவை சாகுபடிக்காக காவிரியில் கர்நாடகா சார்பில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என டெல்லியில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 87வது கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் கர்நாடகா சார்பில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறக்காததைக் கண்டித்து தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் காவிரி விவகாரம் தீவிரமடைந்துள்ளது. அதே சமயம் நேற்று கர்நாடகாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

 

இதற்கிடையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டத்தில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது எனக் கர்நாடகா தரப்பு அதிகாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு தரப்பு அதிகாரிகள் சார்பில் கர்நாடக அணைகளில் 50 டி.எம்.சி நீர் இருப்பதால் 12 ஆயிரத்து 500 கன அடி நீரைக் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு அதாவது அக்டோபர் 15 ஆம் தேதி வரை 3000 கன அடி நீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

 

இந்நிலையில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு சீராய்வு செய்ய வேண்டும் எனக் காவிரி மேலாண்மை வாரியத்தில் கர்நாடகா மேல் முறையீடு செய்துள்ளது. மேல்முறையீட்டு மனுவில், “தற்போதைய சூழலில் தண்ணீர் திறக்க முடியாத நிலையில் இருக்கிறோம். மேலும் மேகதாது அணை விவகாரம் குறித்தும் ஆணையத்தில் விவாதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சித்தராமையா மீது பா.ஜ.க பகிரங்க குற்றச்சாட்டு - என்.ஐ.ஏ விசாரிக்க வலியுறுத்தல்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

BJP blames Siddaramaiah; insists on NIA investigation

 

கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஹூப்பள்ளியில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தென்னிந்திய இஸ்லாமிய மத தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் சித்தராமையா பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது, அந்த மேடையில் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ் ஆதரவாளர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் சித்தராமையா ஐஎஸ் ஆதரவாளர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டது குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் கருத்து தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “முதல்வர் சித்தராமையா ஹூப்பள்ளியில் நடந்த மாநாட்டில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்களுடன் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார். தன்வீர் பீரா ஒரு பயங்கரவாத அனுதாபி. அவர் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பைக் கொண்டவர்” என்று கூறினார். இதனை மேற்கோள் காட்டி இந்த விவகாரத்தை சி.பி.ஐ., அல்லது என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும் என்று பா.ஜ.க,வின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி கோரிக்கை வைத்துள்ளார்.

 

மங்களூரில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவேந்தல் கூட்டம் நேற்று (06-12-23) நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் எம்.எல்.ஏ., சி.டி.ரவி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஹூப்பள்ளியில் முதல்வர் சித்தராமையா பங்கேற்ற இஸ்லாமியர்கள் மாநாட்டில் ஐஎஸ் ஏஜெண்டு கலந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை பா.ஜ.க எம்.எல்.ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

 

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்புடைய நபருடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். ஒரு அரசு நிகழ்ச்சியில் அவருடன் சேர்ந்து கலந்து கொண்டுள்ளார். இந்த விவகாரத்தை சி.பி.ஐ மற்றும் என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும். அந்த நிகழ்ச்சியில் இருந்தவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன என்பது பற்றி தீவிர விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Chance of rain with thunder and lightning in Chennai

 

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (01.12.2023) காலை 10 மணி வரை  மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்