Skip to main content

'இளையராஜா பாடலை பாடி வரவேற்ற தமிழக ராணுவ வீரர்கள்-விவரம் தெரியாமல் வியந்து வீடியோவை பகிர்ந்த மோடி

Published on 24/10/2022 | Edited on 25/10/2022

 

Tamil Nadu Army soldiers welcomed MODI by singing 'Suranganikka Malu Kanna Va...'

 

பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில் இராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமராக பதவியேற்றதிலிருந்து எட்டு ஆண்டுகளாக இராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிவருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில் இராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.

 

அப்போது அங்கு இராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, "என்னைப் பொறுத்தவரை, நீங்கள் அனைவரும் பல ஆண்டுகளாக எனது குடும்பமாக இருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் மத்தியில் தீபாவளியைக் கொண்டாடுவது இந்த ஆண்டு எனக்கு கிடைத்த பாக்கியம். புதிய இந்தியா என்பது ஒரு நாடு மட்டுமல்ல, அன்பு, தியாகம், இரக்கம், மகத்தான திறமை, தைரியம் உள்ளிட்டவையின் கலவையாக இந்த புதிய இந்தியா உருவாகியுள்ளது. ஒரு நாட்டின் துணிச்சலான வீரர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தால், அந்த நாடு ஒரு பொழுதும் அழியாது. இமயமலை போல் நம் இராணுவம் இருப்பதால் நமது நாடு பெருமை கொள்கிறது” என்று கூறினார்.

 

இந்தநிகழ்ச்சியில் பிரதமரை வரவேற்ற தமிழக ராணுவ வீரர்கள் 'சுராங்கனி.. சுராங்கனி... சுராங்கனிக்கா மாலு கண்ணா வா... ஊட்டியில மாமனுக்கு மலையில வீடு... ஊட்டுக்குள்ள குளிரடிச்சா விஸ்கிய போடு... சூடு கொஞ்சம்  ஏறுச்சுன்னா சுதியில பாடு... ஜோடிக்கொரு பொண்ணிருக்கு டூயட்டு பாடு'' என்ற பாடலை வரி பிசகாமல் பாடியபடி அவரை வரவேற்றனர். பின்னர் அங்கிருந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி அவரது கைகளால் இனிப்புகளை ஊட்டினார். தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், 'தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இந்த அற்புதமான செயலால் நம்மை வியக்க வைத்தனர்' என தமிழக ராணுவ வீரர்கள் சுராங்கனி பாடலை பாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி .

 

இப்பாடல் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த 'அவர் எனக்கே சொந்தம்' என்ற திரைப்படத்தில் இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன், பூரணி குரலில் வெளியான பாடல் என்பது குறிப்பிடத் தகுந்தது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.