Skip to main content

ரெட்டை கதிரே... ஷாக் கொடுத்த விக்கி நயன்

Published on 09/10/2022 | Edited on 09/10/2022

 

nn

 

அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் தற்போது இருவருக்கும் இரட்டை ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதனை நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் தங்களது டிவிட்டர் பக்கங்களில் புகைப்படத்துடன் 'தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. அனைவரின் ஆசிர்வாதமும்' வேண்டும் என பதிவிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

முன்னணி நடிகையுடன் கூட்டணி - ஹீரோயின் சப்ஜெக்டை கையிலெடுத்த சசிகுமார்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sasikumar direct nayanthara movie

அயோத்தி பட வெற்றியைத் தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃப்ரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். 

இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

sasikumar direct nayanthara movie

நயன்தாரா தற்போது, சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.