Tamil addition to coWIN website!

Advertisment

கரோனா தடுப்பு ஊசி செலுத்த முன்பதிவு செய்யும்'கோவின்' (CoWIN) இணையதளத்தில் தமிழ் மொழி அல்லாமல் 9 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில்,தமிழ்நாடுமுதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலை அடுத்து மத்திய அரசிடம் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் அறிவுறுத்தியிருந்தார்.

இதற்கு 'இணைய வசதி படிப்படியாக பல்வேறு மாநில மொழிகளில் செயல்படுத்தப்பட்டுவருவதாகவும், இதன் அடுத்தக்கட்டத்தில் இரண்டு நாட்களுக்குள் தமிழ் மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும்' என ஒன்றிய அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோவின் இணையதளத்தில் தமிழ்மொழி சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இணையதளத்தில் 12வது மொழியாக தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது. மலையாளம், கன்னடம், பஞ்சாபி, தெலுங்கு, குஜராத்தி, பெங்காலி, மராத்தி உள்ளிட்ட மொழிகளுடன் தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது.