மத்திய அரசின்புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரானவிவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் வேளாண்சட்டங்கள் தொடர்பாகஒன்பது கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தாலும், இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இதனையடுத்து விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும்இடையேயான 10 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நாளை (20.01.21) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனைமத்திய வேளாண் அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வேளாண்சட்டங்கள் தொடர்பான பிரச்சனையைதீர்க்க, உச்சநீதிமன்றம் அமைத்தகுழுவை விவசாயிகள் நிராகரித்தநிலையில்நாளை பேச்சுவார்த்தை நடக்க இருப்பதுகுறிப்பிடத்தக்கது.