ADVERTISEMENT

ஜிஎஸ்டி தாக்கல் தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

05:20 PM Jun 12, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பரவல் காரணமாக 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று காணொலிகாட்சி மூலம் நடைபெற்றது. இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய அரசு உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.


இந்த கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ஜிஎஸ்டி வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் அபராதம் கிடையாது. வரியை முழுமையாக செலுத்தி, கணக்கு தாக்கலில் தாமதமானாலும் அபராதம் இருக்காது. கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே 2017-ம் ஆண்டு ஜூலை முதல் 2020 ஜனவரி வரை காலத்திற்கான ஜிஎஸ்டி ரிட்டன் நிறைய தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன. இந்த காலத்திற்கான ஜிஎஸ்டி தாக்கலை தாமதக் கட்டணம் இன்றி செலுத்தலாம். அதேபோல, அதற்கு முந்தைய காலத்திற்குரிய ஜிஎஸ்டி தாமதக் கட்டணம் 18 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

மேலும், மாநிலங்களின் கைகளில் பணம் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்வதால் மத்திய அம்மாநில அரசுகளுக்கு இடையே உள்ள நிதி பகிர்வு ஒழுங்கின்மையை சரிசெய்துள்ளோம். இதன் மூலம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சிரமமின்றி நிதியுதவி செய்ய இயலும். இந்த புதிய திட்டத்தின்படி, டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT