Skip to main content

கொலை செய்த குரங்குகள் மேல எஃப்.ஐ.ஆர் போடுங்க....

Published on 20/10/2018 | Edited on 20/10/2018
monkey


உத்திரப் பிரேதச மாநிலத்தில் பாக்தத் பகுதியில் வசித்து வந்தவர் 72 வயதான தரம்பால் சிங். இவர் அந்த பகுதியில் இருக்கும் காட்டுக்குள் விறகு, சுள்ளிகளை பொறுக்கிகொண்டிருந்தார். அப்போது அவர் விறகுகளை பொறுக்கிகொண்டிருந்த இடத்திற்கு அருகிலிருந்த ஒரு கட்டிடத்தில் குரங்குகள் கூட்டமாக இருந்துள்ளன. இவரை பார்த்த குரங்குகள் செங்கல்லை எடுத்துகொண்டு தரம்பால் சிங்கை அடித்து உள்ளன. கற்களால் தாக்கப்பட்ட தரம்பால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

இதனால் மனவேதனையில் உள்ள தரம்பாலின் குடும்பத்தார், போலிஸாரிடம் சென்று இதற்கு காரணமான குரங்குகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் எஃப்.ஐ.ஆர் போடுங்கள் என்று காட்டயப் படுத்தியுள்ளனர். போலிஸாரோ விலங்குகள் மீது எஃப்.ஐ.ஆர் போட இயலாது என்று அவர்களை அனுப்பிவைத்துள்ளனர். கோபமடைந்த குடும்பத்தினர் குரங்குகள் மீது எஃப்.ஐ.ஆர் போட வேண்டும் என்று மேல் அதிகாரிகளுக்கு கடிதம் எழுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்