Skip to main content

தாஜ்மகாலுக்கு புதுப்பெயர்! - சர்ச்சையைக் கிளப்பும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. 

Published on 11/06/2018 | Edited on 11/06/2018

தாஜ்மகாலுக்கு புதிய பெயர் வைக்கவேண்டும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் பேசியுள்ளார். 
 

Surendra

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் பைரியா தொகுதியைச் சேர்ந்தவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங். எப்போதும் சர்ச்சைக்குரிய விதமாக கருத்துகளை வெளிவிட்டு வரும் அவர், தற்போது முகலாயர்களால் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சாலைகள் மற்றும் நினைவுச் சின்னங்களில் இருக்கும் முகலாயர்களின் பெயர்களை மாற்றவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 
 

இதுதொடர்பாக பேசிய அவர், ‘அந்த நினைவுச் சின்னங்கள் நம் மண்ணில் இருந்து கட்டமைக்கப்பட்டவை என்பதால், அவற்றை நாம் அழித்துவிடக் கூடாது. பெயர்களை மட்டும் மாற்றியமைக்க வேண்டும். ஒருவேளை எனக்கு வாய்ப்பளித்தால் ராஷ்டிரிய-பக்த-மகால் என அவற்றிற்கு பெயரிடுவேன்’ என தெரிவித்தார். தாஜ்மகாலுக்கு என்ன பெயர் வைக்க நினைக்கிறீர்கள் என கேட்டபோது, ‘சிவாஜி மகால், ராம் மகால் அல்லது கிருஷ்ண மகால் என ஏதாவதொரு பெயரை வைத்துக்கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார். 
 

சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பெயர்போன சுரேந்திர சிங், அரசு அதிகாரிகளை விட விலைமாதுக்கள் மிக அருமையாக வேலைபார்ப்பார்கள் என்பது போன்ற கருத்துகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்