உத்திரபிரதேச அரசு தாஜ்மஹாலின் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்கள் போட்டி, போட்டுக்கொண்டிருக்கின்றன.

Advertisment

tajmahal

கடந்த சில மாதங்களுக்கு முன், தாஜ்மஹாலை சுற்றுலா தளங்கள் பட்டியலில் இருந்து நீக்கினார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இது இந்தியா முழுக்க பெரும் அதிர்வை உண்டாக்கியது.

இந்நிலையில் உ.பியில் அமலுக்கு வந்தபுதிய சட்டத்தின் அடிப்படையில் சுற்றுலா தளங்கள் அனைத்தும் தனியார் பராமரிப்பில் விடப்படும்.ஐடிசி மற்றும் ஜிஎம்ஆர் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் நடுவில்தான் தற்போது போட்டி நிலவுகிறது. நிறுவனங்கள் தங்கள் ஆண்டு வருமானத்தில் இரண்டு சதவீதத்தை தாஜ்மஹால்பராமரிப்புக்கு கொடுக்க வேண்டும். விரைவில் ஏலம் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.