Skip to main content

தாஜ்மஹால் இந்து கோவிலா? சர்ச்சையை கிளப்பிய இந்து மகாசபை காலெண்டர்!

Published on 19/03/2018 | Edited on 19/03/2018
calander


தாஜ்மஹால், குதுப் மினார் உள்ளிட்ட முகலாய கால நினைவுச் சின்னங்களை இந்துகோவில் என குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய விதமாக ஆண்டு காலெண்டர் ஒன்றை இந்து மகாசபை வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், அலிகார் பகுதியை சேர்ந்த இந்து மகாசபை சார்பில் இந்து ஆண்டு காலெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தாஜ்மஹாலை ’தேஜோ மகாலய ஆலயம்’ என்றும், மத்திய பிரதேசத்தில் உள்ள கமல் மௌலா மசூதியை ’போஜ்சாலா’ என்றும், காசியின் கியான்விப்பி மசூதியை ’விஸ்வநாத ஆலயம்’ என்றும் குதுப் மினாரை ’விஷ்ணு ஸ்ராம்’ என்றும் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை ’ராம் ஜன்மபூமி’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து மகாசபை தேசிய செயலாளர் பூஜா ஷாகுன் பாண்டே கூறும்போது, இந்த நாட்டை ஒரு இந்து ராஷ்ட்ராவாக மாற்றுவதற்கு தீர்மானித்தோம். அதன்படி, மங்களகரமான புத்தாண்டு தினத்தன்று இந்து புத்தாண்டு காலண்டரை வைத்து சடங்குகளை செய்தோம் என்றார்.

மேலும், இந்தியாவை ’இந்து தேசமாக’ அறிவிக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை அரசு ஏற்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அனைத்து இந்திய முஸ்லிம் தனி சட்ட வாரியம், இது அடிப்படையற்ற தகவல் மற்றும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல்பாடு என்றும் இதுபோல் இஸ்லாமிய வெறுப்பை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்