பாகிஸ்தானிலிருந்து வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு... தாஜ் ஹோட்டல் பகுதியில் போலீஸார் குவிப்பு...

taj hotel under high security alert

பாகிஸ்தானிலிருந்து தாஜ் ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, மும்பை தாஜ் ஹோட்டல் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை கொலாபாவில் உள்ள தாஜ் ஹோட்டலுக்கும், பாந்த்ராவில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஹோட்டலுக்கும் நேற்றிரவு கராச்சியிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாஜ் ஹோட்டல் முழுவதையும் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்போவதாக தொலைபேசியில் பேசிய அந்த நபர் மிரட்டல் விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மிரட்டல் விடுத்த நபர் தன்னை லஷ்கர்-இ-தைபா பயங்கரவாத அமைப்பின் உறுப்பினராக அடையாளம் காட்டிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், இரண்டு ஹோட்டல்களும் செயல்படாத சூழலில், ஹோட்டல் அமைந்துள்ள மும்பையின் முக்கியப் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மிரட்டல் அழைப்பு குறித்து சைபர் செல் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Mumbai Pakistan
இதையும் படியுங்கள்
Subscribe