tai month new moon day people gathered on puducherry beach

சிவன், பெருமாள் சுவாமிகள் ஒன்றாக கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்குவது தை அமாவாசையில் மட்டுமே நிகழ்வதால் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ஆண்டுதோறும் தை அமாவாசையில் திதி கொடுப்பது வழக்கம்.

Advertisment

தை அமாவாசையான இன்று (21.01.2023) புதுச்சேரி கடற்கரையில் சுவாமி தீர்த்தவாரி நடைபெற்றது. லாஸ்பேட்டை சுப்பிரமணியர் கோயில், ரேணுகா பரமேஸ்வரி அம்மன், சுந்தர சபரீஸ்வரர் கோயில், மணக்குள விநாயகர், காமாட்சி அம்மன், சுந்தரவினாயகர் கோயில், கௌசிக பாலசுப்பிரமணியர்,தண்டு முத்துமாரியம்மன், வரதராஜபெருமாள்,உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் புதுவை கடற்கரை காந்தி திடலுக்கு கொண்டுவரப்பட்டன.

Advertisment

அங்கு கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பக்தர்கள் அங்கு திரளாகசுவாமி தரிசனம் செய்தனர். புதுவை கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.இதே போல, தை அமாவாசையை முன்னிட்டுமுன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி சங்கராபரணி, தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் நடந்தது. இதில் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.