ADVERTISEMENT

பிளாஸ்மா தானம் வழங்கும் தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள்...

11:13 AM Apr 28, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்லியில் தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்துகொண்டு கரோனா பாதிப்புக்கு உள்ளாகிக் குணமடைந்த 300 பேர் கரோனா சிகிச்சைக்காக பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளனர்.

கடந்த மாதத் தொடக்கத்தில் தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தில் நடந்த தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இந்தோனேசியா, தாய்லாந்து, உட்பட உலகின் பல இடங்களிலிருந்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மக்கள் வந்திருந்தனர். இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ள சூழலில், தப்லீக் ஜமாத் இமாம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கரோனா பாதிப்புக்கு உள்ளாகிக் குணமடைந்த 300 பேர் கரோனா சிகிச்சைக்காக பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளனர்.

கரோனா சிகிச்சையில் பிளாஸ்மா முறை குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வெற்றியைத் தருவதால், இதனைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்க இந்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் உடலிலிருந்து, அதன் எதிர்ப்புச்சக்தியை உடைய பிளாஸ்மா செல்கள் நோயாளிகளின் உடலில் செலுத்தப்பட்டு சிகிச்சையளிப்பதே இம்முறையின் நோக்கமாகும்.

இதற்காகக் குணமடைந்த கரோனா நோயாளிகள் பிளாஸ்மா தானம் வழங்க முன்வரவேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்துகொண்ட 300 பேர் உட்பட சுமார் ஆயிரம் பேர் இந்த பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளனர். ஒருவர் வழங்கும் பிளாஸ்மாவை வைத்து மூன்று பேரின் உயிரைக் காக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT