புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகீர் உசேன் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தபேலா இசைக்கலைஞர் ஜாகீர் உசேன்(73) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தவர் ஜாகீர் உசேன். இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருதும் ஜாகீர் உசேனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2024 பிப்ரவரியில்3 கிராமிய விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் இருதயக் கோளாறு காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருப்பது இசைக்கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.