
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்றார்.
உச்சநீதிமன்றத்தின் ஐம்பதாவது தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்று வருகிறார். இதற்கான பதவியேற்பு விழா டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், சட்டத்துறை அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார்.
ஆதார் கார்டு வழக்கு, அயோத்தி வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் பங்காற்றியுள்ள நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், அதுதொடர்பான வழக்குகளில் தீர்ப்பும் வழங்கியிருக்கிறார். அதேபோல், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு, தன்பாலின சேர்க்கையை அங்கீகரிப்பது உள்ளிட்ட பரபரப்பான தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதிடி.ஒய்.சந்திரசூட் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)