Skip to main content

சுவிஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு... வெளியாகிறது இந்தியர்களின் கருப்பு பண பட்டியல்...

Published on 05/02/2019 | Edited on 05/02/2019

 

ghxffxg

 

இந்தியர்களில் கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என சுவிட்சர்லாந்தின் லோசானில் உள்ள நீதிமன்றம் எச்எஸ்பிசி வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து எச்எஸ்பிசி வங்கி சுவிஸ் கிளையில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் விபரத்தை வழங்க சுவிட்சர்லாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2006-07 ஆம் ஆண்டில் 1195 இந்தியர்களின் 24,420 கோடி ரூபாய் சுவிஸ் வங்கிகளில் வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதில் 276 பேரின் கணக்குகளில் மட்டும் ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமாக பணம் பதுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் ஏற்கனவே கடந்த 2011 ஆம் ஆண்டு சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்த 628 இந்தியர்களின் பட்டியலை பிரான்ஸ் அதிகாரிகள் வெளியிட்டனர். இதனை தொடர்ந்து தற்போது நீதிமன்ற உத்தரவின் காரணமாக கருப்பு பணம் வைத்திருப்பவர்களின் விபரங்களை வெளியிட அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிட்ட சுவிஸ்! 

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

The Swiss published the bank account details of Indians!

 

இந்தியர்கள் பலர் தங்கள் கருப்பு பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக, பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு நிலவிவருகிறது. கடந்த சில வருடங்களாக தங்கள் நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களை சுவிட்சர்லாந்து இந்தியாவிற்கு வழங்கிவருகிறது.

 

அதன்படி இந்த ஆண்டும் சுவிஸ் வங்கி, தனது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்ட தகவலை வெளியிட்டுள்ளது. 

 

இதன் மூலம், சுவிஸ் வங்கியில் இருக்கும், தனிநபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் சார்ந்த நூற்றுக்கணக்கான பொருளாதார கணக்குகள் அடங்கிய தகவல் இந்திய அரசுக்கு கிடைத்துள்ளது. இந்த தகவல் பரிமாற்றத்தில் இரகசியத்தன்மை காரணமாக மொத்த பணத்தின் மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

“நிறைய கருப்பு பணம் இருக்கு.. ஒன்னு கொடுத்தா ரெண்டா தரோம்” - பதறும் கோவை

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

some persons cheated a mechanic of one lakh rupees in Coimbatore

 

நீங்கள் ஒரு லட்சம் கொடுத்தால், இரண்டு லட்சம் தருகிறோம் என மெக்கானிக்கை ஏமாற்றிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த திருவேங்கடசாமி, அதே பகுதியில் மோட்டார் மெக்கானிக் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில், திருவேங்கடசாமி வேலை பார்க்கும் கம்பெனிக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மோட்டார் சரி செய்ய வந்துள்ளார். அப்போது, திருவேங்கடசாமிக்கும் மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

அந்த சமயத்தில், மணிகண்டன் கூறும்போது, "என்னுடைய முதலாளி கார்த்தி என்பவர் நிறைய கருப்பு பணம் வைத்துள்ளார். அந்தப் பணத்தை எங்களால் வெளியே கொண்டுவர முடியாது. அதனால், நீங்கள் ஒரு லட்சம் கொடுத்தால், நாங்கள் இரண்டு லட்சம் தருவோம்" எனப் பேசியுள்ளார். இதில், சிறிது பதற்றமடைந்த திருவேங்கடசாமி, இப்போது என்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார்.

 

ஆனால், திருவேங்கடசாமியை விடாத மணிகண்டன், அவரை தினமும் செல்போனில் அழைத்து, பணம் ரெடி ஆகி விட்டதா? சீக்கிரம் வாருங்கள். இல்லையென்றால், உங்களுக்குப் பணம் கிடைக்காது என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் இதை உண்மை என நம்பிய திருவேங்கடசாமி அவருக்குத் தெரிந்த பைனான்சியர் கணேஷ் என்பவரிடம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார்.

 

இதையடுத்து, ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுப்பதற்கு பைனான்சியர் கணேஷ் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, மணிகண்டனுக்கு போன் செய்த திருவேங்கடசாமி, என்னிடம் பணம் தயாராக உள்ளது. எங்கு வந்து வாங்கிக் கொள்ளலாம் எனக் கேட்டுள்ளார். மணிகண்டனோ ஆனைமலை அருகே உள்ள அம்பராம்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வாருங்கள். உங்களுக்கு பணம் கொடுத்து விடுகிறேன் எனக் கூறியுள்ளார்.

 

இந்நிலையில், பணம் கிடைக்கும் என்ற ஆசையில் இருந்த திருவேங்கடசாமி, அம்பராம்பாளையத்தில் காத்துக் கொண்டிருந்த  கார்த்தி மற்றும் மணிகண்டனிடம், தான் வைத்திருந்த ஒரு லட்சத்தை கொடுத்துவிட்டு அவர்களிடம் இருந்து நான்கு 500 ரூபாய் கட்டுகளில் இரண்டு லட்சத்தை வாங்கியுள்ளார். இதையடுத்து, டூவீலரில் வந்த மர்ம நபர்கள் பணத்தை கொடுத்தவுடன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர். அவர்கள் சென்றவுடன் அந்த நான்கு 500 ரூபாய் கட்டுகளை எடுத்து பார்த்தபோது திருவேங்கடசாமிக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

அதில், முன்பக்கம் பின்பக்கம் என 4 அசல் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்துள்ளது. மற்றவை எல்லாம் வெறும் வெள்ளைத் தாள்கள் தான். இதனால், திடுக்கிட்டுப்போன திருவேங்கடசாமி, என்ன செய்வது எனத் தெரியாமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை போலீசார், திருவேங்கடசாமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருப்பு பணம் தருகிறோம் எனக் கூறி வெள்ளைத் தாள்களை கொடுத்து ஏமாற்றிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.