Skip to main content

ஸ்விஸ் வங்கி முதலீடு... முன்னணியில் இந்தியா

Published on 02/07/2018 | Edited on 02/07/2018
swiss

 

 

 


ஸ்விஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள நாடுகளில் இந்தியா 73வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இங்கிலாந்து. கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளியான சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள நாடுகளில் இந்தியா 83வது இடத்தில் இருந்தது. ஆனால் 2017 ஆம் ஆண்டில் மட்டும் 7000கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளதால் 73வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது(!!!) என ஸ்விஸ் தேசிய வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது. அதேபோன்று இந்த பட்டியலில் பக்கத்து நாடான பாகிஸ்தான் 72 வது இடத்தை பிடித்துள்ளது.

 

 

 

ஸ்விஸ் வங்கியில் வெளிநாட்டவர்கள் செய்துள்ள முதலீட்டில் இந்தியர்களின் முதலீடு மட்டும்  0.07% சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டில் 0.04% ஆக இருந்தது. 1996 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை இந்தியா இந்த பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2004 ஆம் ஆண்டில் 37 வது இடம் பிடித்ததுதான் அதிகபட்சமான இடம் ஆகும்.  

 

 

 

 

         

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிட்ட சுவிஸ்! 

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

The Swiss published the bank account details of Indians!

 

இந்தியர்கள் பலர் தங்கள் கருப்பு பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக, பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு நிலவிவருகிறது. கடந்த சில வருடங்களாக தங்கள் நாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களை சுவிட்சர்லாந்து இந்தியாவிற்கு வழங்கிவருகிறது.

 

அதன்படி இந்த ஆண்டும் சுவிஸ் வங்கி, தனது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியாவைச் சேர்ந்த தனிநபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்ட தகவலை வெளியிட்டுள்ளது. 

 

இதன் மூலம், சுவிஸ் வங்கியில் இருக்கும், தனிநபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள் சார்ந்த நூற்றுக்கணக்கான பொருளாதார கணக்குகள் அடங்கிய தகவல் இந்திய அரசுக்கு கிடைத்துள்ளது. இந்த தகவல் பரிமாற்றத்தில் இரகசியத்தன்மை காரணமாக மொத்த பணத்தின் மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

80 வயது மூதாட்டிக்கு ஸ்விஸ் வங்கியில் ரூ.196 கோடி... வருமான வரித்துறை நடவடிக்கை...

Published on 20/07/2020 | Edited on 20/07/2020

 

mumbai woman had 196 crore in swiss bank

 

சுவிஸ் வங்கியில் ரூ.196 கோடி டெபாசிட் வைத்திருப்பதாக மும்பையைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவருக்கு மும்பை வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

 

மும்பையில் வசிக்கும் ரேணு தரணி (80) ஜெனீவாவில் உள்ள ஹெச்.எஸ்.பி.சி. வங்கியில் அறக்கட்டளை ஒன்றின் பெயரில் கணக்கு வைத்திருந்ததாகவும், அதில் ரூ.196 கோடி இருப்பு வைத்துள்ளது குறித்து அவர் வருமானவரித்துறைக்குத் தகவல் அளிக்கவில்லை எனவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜூலை, 2004- இல் தொடங்கப்பட்ட இந்த வங்கிக் கணக்கில் கேமேன் ஐலண்ட் தீவுகளைச் சேர்ந்த ஜிடபிள்யூ இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் மூலம் பணம் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், 2005-06 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட ஐ.டி. ரிட்டர்னில் இந்தத் தகவலைத் தரணி கொடுக்கவில்லை.

 

இதுதொடர்பான வழக்கு அக்டோபர் 31, 2014 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், அப்போது ஜெனீவாவின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் தனக்குக் கணக்கு இல்லை என்றும், ஜிடபிள்யூ முதலீட்டு வங்கியில் இயக்குநராகவோ அல்லது பங்குதாரராகவோ தான் இல்லை என்றும் கூறி ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார். அவர் தன்னை ஒரு குடியுரிமை இல்லாத இந்தியர் எனக் குறிப்பிட்டு, எனவே தனக்கு வரிவிதிக்க முடியாது என்று கூறியிருந்தார்.

 

அதேநேரம் 2005-06 ஆம் ஆண்டிற்கான வருமான வரிக்கணக்கில் தரணி தனது ஆண்டு வருமானத்தை ரூ 1.7 லட்சம் என்று கூறியதோடு, அவர் பெங்களூரில் வசித்துவரும் வரி செலுத்தும் இந்தியர் எனக் குறிப்பிட்டிருந்தார். பிரமாண பத்திரத்தில் இந்தியர் அல்லாத வெளிநாட்டவர் என்றும், வரி படிவத்தில் இந்தியர் என்றும் தரணி குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, மும்பை வருமானவரித்துறை மேல் முறையீட்டு ஆணையம் (ஐ.டி.ஏ.டி.) அபராதத்துடன் வரி செலுத்துமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.