swine flu

கடந்த ஒரு வாரத்தில் கர்நாடகாவில் பன்றி காய்ச்சல் அதிகரித்துள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது. நேற்று இரவு மட்டும் இந்த மாநிலத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூருவில் இரண்டு பேரும், ராம்நகர், தும்கூரு ஆகிய மாவட்டங்களில் 3 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Advertisment

பன்றி காய்ச்சல் வேகமாக பரவிவருவதால், இதை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்கிறது. மேலும், இந்த காய்ச்சலை தடுக்க சிறப்பு முகாம்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கர்நாடகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் பரவி வருவதால் இதன் தாக்கம் தமிழகத்தில் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

Advertisment