தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக ஸ்விக்கி ஊழியர் மீது பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறிய நிலையில், அப்பெண்ணுக்கு இழப்பீடாக 200 ரூபாய் கூப்பனை ஸ்விகி நிறுவனம் வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

swiggy delivery boy harrased a bengaluru girl and swiggy say a sorry and gifted her 200 rupees coupon

பெங்களூருவை சேர்ந்த அந்த பெண் கடந்த வியாழக்கிழமை ஸ்விக்கி வழியாக உணவு ஆர்டர் செய்துள்ளார். அதனை கொடுக்க வந்த ஸ்விக்கி ஊழியர், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.

Advertisment

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் ஸ்விக்கி நிறுவனம், அந்த பெண்ணிடம் மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையை கூறி இந்த விவகாரத்தை முடித்ததுடன் அந்த பெண்ணுக்கு 200 ரூபாய் மதிப்புள்ள கூப்பனை இழப்பீடாக அளித்துள்ளது.

இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, அது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment