Advertisment

கேரளாவில் தங்க கடத்தலில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா கைது!!   

 Swapna arrested

Advertisment

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகபெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாகசுங்கத்துறை அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசியத் தகவல் கிடைத்தது. பொதுவாகதூதரகத்திற்கு வரும் பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யமாட்டார்கள். ஆனால், இந்ததகவலை அடுத்துகடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி தூதரகத்துக்கு வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலை, அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்,அதில் 30 கிலோ தங்கம் இருந்துள்ளது. தூதரகத்தின் பெயரில் இவ்வளவு பெரிய தங்ககடத்தல் நடைபெற்றது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

கேரளாவையே உலுக்கிய இந்த சம்பவத்தில்தங்க கடத்தலில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்தஸ்வப்னாசுரேஷ்தமிழகம் வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது பெங்களூரில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என்.ஐ.ஏ. போலீசார் அவரை கைது செய்து இருக்கிறார்கள்.நாளை கொச்சியில் உள்ள தலைமை என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டஅவரைரகசிய இடத்தில் வைத்துஅவரிடம்விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Smuggling Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe