Advertisment

'மம்தா தொடர்ந்த வழக்கை அங்கு விசாரிக்கக் கூடாது' - உச்ச நீதிமன்றத்தை நாடிய சுவேந்து அதிகாரி!

MAMATA BANERJEE

Advertisment

மேற்கு வங்கத்தில் மார்ச் - ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது. இந்தத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில், தனது கட்சியிலிருந்து பாஜகவிற்குத் தாவிய முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியை எதிர்த்து மம்தா போட்டியிட்டார்.

வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான அன்று, முதலில் மம்தா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் சுவேந்து அதிகாரி வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தல் முடிவினை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக மம்தா, முடிவுகள் வெளியான அன்றே தெரிவித்திருந்தார். அதன்படியே கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை முதலில் கௌஷிக் சந்தா என்ற நீதிபதி விசாரிப்பதாக இருந்தது. ஆனால் கௌஷிக் சந்தாவிற்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதால், அவர் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து கௌஷிக் சந்தா இந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக்கொண்டார்.

இதனையடுத்து ஷாம்பா சர்க்கார் என்ற நீதிபதிக்கு, இந்த தேர்தல் முடிவிற்கு எதிரான வழக்கை விசாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (14.07.2021) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷாம்பா சர்க்கார், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க சுவேந்து அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். மேலும், நந்திகிராம் தேர்தல் தொடர்பான ஆவணங்கள், தேர்தல் பேப்பர்கள், தேர்தலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், தேர்தலின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் உட்பட அனைத்தையும் பாதுகாக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி ஷாம்பா சர்க்கார் உத்தரவு பிறப்பித்தார்.

Advertisment

இந்தநிலையில்சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி தொடர்ந்த இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் நீதித்துறையின் மீது தாக்குதல்நடப்பதாக, மம்தா தொடர்ந்த வழக்கை முதலில் விசாரிக்க இருந்த நீதிபதி கௌஷிக் சந்தா கூறியதைச் சுட்டிக்காட்டி சுவேந்து அதிகாரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Supreme Court Assembly election west bengal Mamata Banerjee
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe