Advertisment

மகள் மீது ஏற்பட்ட சந்தேகம்; இரும்பு கம்பியால் அடித்தே கொன்ற கொடூர தந்தை!

Suspicion over daughter and father beats daughter to with iron rod in uttar pradesh

உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டம் அஷ்ரஃப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்பால். இவருக்கு 19 வயதில் அன்ஷு என்ற மகள் இருந்தார். தனது மகள், வேறொரு நபருடன் உறவு வைத்திருக்கிறார் என்ற சந்தேகம் ராஜ்பாலுக்கு இருந்துள்ளது.

Advertisment

இந்த நிலையில், சம்பவம் தினத்தன்று, தனது மகளை இரும்பு கம்பியால் அடித்து ராஜ்பால் கொலை செய்துள்ளார். இதனையடுத்து, ராஜ்பால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரின் அலறல் சத்தத்தை கேட்ட அங்கிருந்த கிராமத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ராஜ்பால், மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisment

இதற்கிடையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அன்ஷுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

police incident
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe