Suspension order of Telangana DGP revoked for Meeting with CM  Revanth Reddy;

தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

அந்த வகையில் தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 64 இடங்களையும், பிஆர்எஸ் 39 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து தெலங்கானாவில் கடந்த 7 ஆம் தேதி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது மாநிலத்தின் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து சில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வந்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமார், ரேவந்த்ரெட்டியை சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதன் மூலம், தேர்தல் விதிகளை மீறியதாக டிஜிபி அஞ்சனி குமாரை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

Advertisment

தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள்விலக்கி கொள்ளப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமாரின் இடைநீக்கத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மேலும், அவர் மீண்டும் அவரது பணியை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.