உத்திரபிரதேசத்தில் இந்து மகாசபை தலைவர் கமலேஷ் திவாரி கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

suspects arrested in kamlesh tiwari case

நேற்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இந்து மகா சபை அலுவலகத்தில் இருந்த தலைவர் கமலேஷ் திவாரி மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். கமலேஷ் திவாரியை சுற்றிவளைத்த மர்ம நபர்கள் அவர்மீது துப்பாக்கியால் சுட்டதோடு, சரமாரி தாக்குதலும் நடத்தினர். அவரை சுட்டுவிட்டு அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்தனர்.

படுகாயம் அடைந்த கமலேஷ் திவாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்து மகா சபை தலைவர் பட்டப்பகலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடத்திய போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.