கேரளாவில் கடந்த 50 வருடங்களில் இல்லாத கனமழையால் கேரளாவே நீர் சூழ் நகரமாக மாறியிருக்கிறது.வெள்ளபாதிப்புகளால் சுமார் 8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தற்போது இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் கூறியதாவது.
கேரளாவில், வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பாஸ்போர்ட்டுகளை கட்டணம் ஏதுமின்றி மாற்றி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. எனவே, பாஸ்போர்ட் சேதம் அடைந்தவர்கள், சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் சேவை மையங்களை அணுகுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Follow Us